Sunday 29 April 2012

இவன் ஒரு சுத்தமான தொழிலாளி

பேருந்து நிலையத்தில் ஒருவனை கண்டேன் ....அவன் நீண்ட நேரமாக பெருக்கி கொண்டு இருந்தான்....முக்கியமாக சொல்ல  வேண்டும் ...அங்கு அவன் மட்டும் தான் தன் வேலையை உண்மையாக செய்து கொண்டு இருந்தான் .....நான் அவன் கடமை உணர்ச்சியை கண்டு வியந்து போனேன்....ஏனென்றால் ஒரு அரசு தொழிலாளி சனிகிழமை கூட வேலை பார்பான் என்றால் மிக அரிதான சம்பவம் தானே......நானும் அவன் நடவடிக்கைகளை கவனித்து கொண்டே இருந்தேன் ....சிறிது நேரம் கழித்து அவன் ஷிர்டில் இருந்து வெத்தலை போன்று கருப்பாக இருக்கும் ஒன்றை வாயில் வைத்து மென்றான்....அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சிறிது நேரம் கழித்து ரத்தம் வாந்தி எடுத்ததை போல கீழே எச்சில் துப்பினான் .....அட கடவுளே அவன் வந்தான் பெருக்கினான் ,பேருந்து நிலையமே இனிமேல் சுத்தமாக போகிறது என்ரேலவா நான் கனவு கண்டேன்....அனால் அவன் என்னமோ சுத்தமான இடத்தில தான் எச்சில் துப்புவேன் என்பதை போல ....சுத்தம் செய்தான்....சிவப்பு நிறத்தை தரையில் பூசி விட்டு சென்றுவிட்டான் ....என் கனவும் அவனோடவே சென்றது....நானும் பேருந்துடன் வீடு திரும்பிவிட்டேன்....இவனோ ஒரு (அ)சுத்தமான   தொழிலாளி

No comments:

Post a Comment

Total Pageviews


Large Visitor Globe